SuperTopAds

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்; கொடுத்த வைத்தியர்கள்!! -12 குழந்தைகள் வைத்தியசாலையில்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வைத்தியர்கள் தலைமையில் நடைபெற்றது.  

அங்கு 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.