தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!! -பாதீட்டை சமர்ப்பித்த நிதி அமைச்சர் தகவல்-
கொரோனா வைரசுக்கான தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை நடந்தது. சபையின் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி தகவலையும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தற்காப்பு, குணப்படுத்துதல், உரிய சிகிச்சை ஆகிய 3 விடயங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை நிறுவப்படும்.
இதேவேளை முன்னதாக கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை மிக விரைவாகக் கொண்டுவந்துள்ளது எனக் கூறிய அவர் பொதுமுடக்கத்தை அமுல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றார்.