கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம்!! -நீந்திக் கொண்டு தாலி கட்டிய விநோதம்-
திருவண்ணாமலையில் ஜ.டி நிறுவனத்தில் பணிபுரியும் சின்னத்துரை மற்றும் ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அவர்கள் தங்களது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நீந்தியபடி செய்ய விரும்பினர்.
இதற்காக சின்னத்துரை தனது உறவினரான புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சி பாடசாலையின் உரிமையாளரின் உதவியை நாடியுள்ளார்.
அவரது பயிற்சியின்படி நீலாங்கரை அருகே ஆழ் கடலில் 60 ஆழத்தில் இருவருக்கும் திருமணம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் திருமண உடை அணிந்து பாதுகாப்பு வசதியுடன் ஆழ் கடலுக்கு படகில் சென்றனர். பின்னர் அவர்கள் ஒட்சிசன் சுவாசிக்கும் கருவி அணிந்து கடலுக்குள் குதித்தனர்.
ஆழ்கடலுக்குள் இருக்கும் செடிகளில் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. நீந்தியபடியே இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின்னர் நீந்தியபடியே தாலியும் கட்டப்பட்டது.