SuperTopAds

தற்கொலைக்கு முயட்சித்த நமீதா!! -தான்பட்ட அவஸ்தைகள் குறித்தும் மனம் திறக்கிறார்-

ஆசிரியர் - Editor II

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் உள்ள நமீதா, தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது உடல் எடை கூடிய, எடை குறைத்த இரு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில் 10 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே பதிவிட்டுள்ளேன். 

உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக மன அழுத்தமும் அசவுகரியமும் இருந்தது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. 

சிலர் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பேசினர். எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்தன. எனக்கான மன அமைதி கிடைக்கவில்லை. 

5 ஆண்டு கால மன அழுத்தத்துக்கு பின் எனது கிருஸ்ணரையும் மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். வைத்தியர்களிடம் சிகிச்சைக்கு செல்லவில்லை. 

தியானம்தான் எனக்கான சிகிச்சையாக இருந்தது, இறுதியில் அமைதியையும் அன்பையும் கண்டுபிடித்தேன். நீங்கள் வெளியில் தேடும் விடயங்கள் உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் இதன் நீதி என்று குறிப்பிட்டுள்ளார்.