SuperTopAds

66 ஆவது நாளாக இடைவிடாது தொடரும் விவசாயிகள் போராட்டம்!! -கவச உடையணிந்த பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிப்பு-

ஆசிரியர் - Editor II
66 ஆவது நாளாக இடைவிடாது தொடரும் விவசாயிகள் போராட்டம்!! -கவச உடையணிந்த பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிப்பு-

விவசாயிகள் டெல்லியில் தொரும் போராட்டத்தினை அடுத்து அங்குள்ள சிங்கு எல்லையில் கவச உடையணிந்த படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளில் ஒரு பிரிவினர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடன் வேறு சில மாநில விவசாயிகளும் இணைந்து கொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கும் கூடுதலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்த போராட்டம் 66 வது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடர்ந்து வருகிறது.

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த உழவுஇயந்திர பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கு திரும்பிய விவசாயிகள், சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 

அந்த பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று சிங்கு எல்லையில் கவச உடையணிந்த பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.