SuperTopAds

சீரானது சசிகலாவின் இரத்த அழுத்தம்!! -வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை-

ஆசிரியர் - Editor II
சீரானது சசிகலாவின் இரத்த அழுத்தம்!! -வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை-

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிறை தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து சசிகலா கடந்த 27 ஆம் திகதி விக்டோரியா அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்து வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது. உடனடியாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இருந்த இரத்த அழுத்த பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், சசிகலா உடல் நிலை குறித்து இன்று விக்டோரியா வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக உள்ளது. செயற்கை சுவாசம் இன்றி சசிகலா சுவாசிக்கிறார்.கொரோனா அறிகுறி இல்லாத நிலை தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.