SuperTopAds

சசிகலாவுக்கு திடீரென இரத்த அழுத்தம் அதிகரிப்பு!! -வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சசிகலாவுக்கு திடீரென இரத்த அழுத்தம் அதிகரிப்பு!! -வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பு-

விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சசிகலாவுக்கு தற்போது திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று இரவு விக்டோரியா வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பின் திடீரென்று இரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சசிகலா நாளை சனிக்கிழமை சிகிச்சையை முடித்துக் கொண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ள நிலையில் அவருக்கு திடீரென்று இரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதால், அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.