ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்திய சூர்யா!! -வட சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்-
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சூர்யா, தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தை முன் நின்று நடத்தி அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.
சூர்யா படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் நேரில் சென்று தாலி எடுத்து கொடுத்து வாழ்த்தினார்.
இத்திருமணத்தில் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.