கரடி கடிக்கு இலக்கான விவசாயி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!
கரடி கடிக்கு இலக்கான விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வயலுக்கு சென்றிருந்த விவசாயியே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் கோம்பாவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும், கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மன்னாகண்டல் பகுதியில் வயல் விதைத்துள்ள இவர்,
அதைப் பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, காட்டுப்பகுதியில் வைத்துக் கரடி தாக்கியுள்ளது.