SuperTopAds

மூட நம்பிக்கையில் பயங்கரம்!! -நரபலிக்காக இரு மகள்களை அடித்து கொண்ற பேராசிரியர் தம்பதிகள்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவின் தமது இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியர்களான புருசோத்தமன், பத்மஜா ஆகியோர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு அலெக்யா (வயது 27), சாய் திவ்யா (வயது 22) என்ற இரு மகள் உள்ளனர். 

ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டில் இவர்கள்  பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அலறல் சத்தத்தை கேட்டு அயலில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மகள்களும் உயிரிழந்து கிடந்ததை கண்டுள்ளனர்.

பெற்றோரை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.