சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்!! -எழுந்து நடப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தகவல்-
சிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் தண்டனை காலம் எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். அவரை சிறை நிர்வாகம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் அனுமதித்தது.
இதன் பின் 21 ஆம் திகதி கலாசிபாளையாவில் உள்ள விக்டோரியா வைத்தியசாலைக்கு சசிகலா மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சசிகலா அதே வைத்தியசாலையில் தனி விடுதிக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று அறிகுறிகள் குறைய தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் வெளியான தகவலில், சசிகலா உணவு உட்கொள்வதாகவும், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்றும் அனைத்து சிகிச்சைக்கும் சசிகலா போதிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.