சசிகலாவுக்கு கொரோனா உறுதி!! -ஒருவாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் இருக்க அறிவுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
சசிகலாவுக்கு கொரோனா உறுதி!! -ஒருவாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் இருக்க அறிவுறுத்தல்-

சசிகலா எதிர்வரும் 227 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது. அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரியின் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் வைத்தியர்கள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, நோயாளர் காவு வண்டி மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரச வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டார். 

அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பின் விக்டோரியா வைத்தியசாலையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

சசிகலா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா வைத்தியசாலைக்கு முன் அதிக எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டி.டி.வி.தினகரன் மட்டும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். ஏனையவர்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரியின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2 ஆவது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவருக்கு பவுரிங் வைத்தியசாலையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற வைத்தியர்கள்  வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலை பரிந்துரை அடிப்படையில் சசிகலா மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன் பின் பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்டோரிய வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.