SuperTopAds

இந்திய கொரோனா தடுப்பூசி குறித்து கடும் விமர்சனங்கள்!! -மக்களுக்கு நப்பிகை ஏற்படுத்த சுகாதார அமைச்சருக்கு தடுப்பூசி-

ஆசிரியர் - Editor II
இந்திய கொரோனா தடுப்பூசி குறித்து கடும் விமர்சனங்கள்!! -மக்களுக்கு நப்பிகை ஏற்படுத்த சுகாதார அமைச்சருக்கு தடுப்பூசி-

சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 'கோவாக்சின்' தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும் பிற நாடுகளைப் போல பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு ஏன் நம்பிக்கையளிக்கக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நான் கொரோனே தடுப்பூசி செலுத்திக்கொள்வேன் என்றும் ஒரு அமைச்சராக இல்லாமல் வைத்தியராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.