பாகுபலிக்கு வில்லாகிறார் விஜய் சேதுபதி!!

ஆசிரியர் - Editor II
பாகுபலிக்கு வில்லாகிறார் விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவில் சகல கதாபாத்திரங்களிலும் நடித்து வரவேற்பு பெற்றுள்ள முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இளையதளபதி விஜய்யை தொடர்ந்து பாகுபலி புகழ் பிரபாஸிற்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

கே.ஜி.எவ் படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். தற்போது கே.ஜி.எவ் 2 படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இந்தப் படத்தையும் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜை முடிவுற்று, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் பிரபாஸ{க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிக்க இல்லை என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு