SuperTopAds

கொதி எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்ட அய்யப்ப பக்தர்கள்!! -தீ மித்தும் மெய்சிலுக்க வைத்த நேர்த்திக்கடன்-

ஆசிரியர் - Editor II
கொதி எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்ட அய்யப்ப பக்தர்கள்!! -தீ மித்தும் மெய்சிலுக்க வைத்த நேர்த்திக்கடன்-

சபரிமலை அய்யப்பன் ஆலய மகர ஜோதி விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் குடிகிரி கிராமத்தைச் அய்யப்பன் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அங்கு ஆண்டுதோறும் பொங்கல் தினத்தனற்று பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை தரிசனம் செய்ய இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 

மாலை அணிவித்து விரதம் இருந்த கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் குடிகிரி கிராம பக்தர்கள் நேற்று வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்தனர். அப்போது தீ மிதித்தும், கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலாகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செய்தனர்.