இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்!! -24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்!! -24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு தொற்று-

இந்தியாவில் புதிதாக 15,968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,95,147 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,529 ஆக உயர்ந்துள்ளது. 


Radio