டெல்லி விவசாயிகள் 50 ஆவது நாளாகவும் வீதியில்!! -நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடரும் போராட்டம்-

ஆசிரியர் - Editor II
டெல்லி விவசாயிகள் 50 ஆவது நாளாகவும் வீதியில்!! -நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடரும் போராட்டம்-

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முழுவீச்சில் தொடர்ச்சியாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இன்று புதன்கிழமையுடன் 50 ஆவது நாளை எட்டி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து உச்ச நீதுpமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் நீதிமன்றம் நியமித்துள்ளது. நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம், அதே நேரத்தில் 15 ஆம் திகதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு