இது மாஸ்டர் பொங்கல்டா!! -டுவிட்டரில் தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஸ்-

ஆசிரியர் - Editor II
இது மாஸ்டர் பொங்கல்டா!! -டுவிட்டரில் தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஸ்-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஸ் பார்த்து ரசித்துள்ளார். 

இயக்குனர் லோகேஸ் கனகராசின் மாஸ்டர் படம் இன்று வெளியானது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஸ் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தைப் கண்டு ரசித்தார். காலைக் காட்சியைப் பார்த்துவிட்டு டுவிட்டரில் கீர்த்தி சுரேஸ் கூறியதாவது:

ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் திரையரங்குக்குத் திரும்புவது எந்தளவுக்குப் பரவசமானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. மாஸ்டர் படத்துக்காக வந்திருப்பது இன்னும் சிறப்பானது. இது மாஸ்டர் பொங்கல்டா என்று கூறி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


Radio