SuperTopAds

தொடரும் கனமழை..! கிளிநொச்சி ஊரியான் கிராமத்தில் தற்காலிக குடிசையில் வாழ்ந்த குடும்பம் பாதிப்பு, நோில் சென்று பிரதேச செயலர் உதவி வழங்கினார்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கிராமத்தில் தற்காலிக வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த குடும்பம் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த குடும்பத்திற்கு உடனடி உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ள கண்டாவளை பிரதேச செயலர், 

முன்னுரிமை அடிப்படையில் இந்த குடும்பத்திற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும். என உறுதியளித்திருக்கின்றார். தொடர்ச்சியான மழை காரணமாக தற்காலிக வீடு இவ்வாறு சேதமடைந்தள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த குடம்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு கூரை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவி பொருட்களை வழங்கி வைத்தனர். அத்தடன் குறிதத் குடும்பத்திற்கான நிரந்தர வீடு அமைப்பதற்கான 

நடவடிக்கையினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் உறுதி வழங்கியுள்ளார்.