தை பொங்கல் குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! வீட்டில் இருங்கள்..

ஆசிரியர் - Editor I

நாளை மறுதினம் தமிழ், சிங்கள மக்களால் தை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் மிக அவதானமாக வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். என சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. 

இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 

அரசின் கொரோனா கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டதுடன். தைப்பொங்கல் நாளில் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு