SuperTopAds

யாழ்.வல்வெட்டித்துறை - தொண்டமனாறில் தன்னை கிராமசேவகர் எனவும் பொதுசுகாதார பரிசோதகர் எனவும் நாடகமாடி பெண் துணிகர கொள்ளை..! அடுத்த சில மணிநேரத்தில் மடக்கிய மக்கள்.

ஆசிரியர் - Editor I

யாழ்.தொண்டமனாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சுகாதார பரிசோதகர்போல் நாடகமாடி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொண்டமனாறு அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குறித்த பெண் தன்னை பொது சுகாதார பரிசோதகர் என கூறி தாம் வெள்ள பாதிப்பு குறித்து ஆராய

வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கறுப்பு நிறத்திலான கோட் அணிந்திருந்த குறித்த பெண் வெள்ளத்தை புகைப்படம் எடுத்ததுடன் ஆடை மாற்றுவதற்கு தனக்கு ஒரு அறை தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து ஆடை மாற்றுவதற்கான அறையை வீட்டிலிருந்த நிலையிலையில், 

அறையில் இருந்த 5 பவுண் தாலிக்கொடி, சங்கிலி மற்றம் மோதிரங்களை கொள்ளையடித்த குறித்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் சந்தேகமடைந்து அறைக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் இணைந்து சகல வழிகளிலும் தேடியுள்ளனர். இதன்போது ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பலாலி பகுதியில் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களால் மடக்கி பிடித்து, 

பின்னர் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டனர். பெண்ணின் கைப்பையில் இருந்து பெருமளவு நகைகளும் தொலைநோக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நகைகள் கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இதேவேளை, அந்தப் பெண் வேறும் சில வீடுகளுக்குச் சென்று தன்னை கிராம அலுவலர் எனக் கூறியுள்ளார் என்று ஊரவர்கள் தெரிவித்தனர்.