அமைச்சருக்கு கொரோனா..! அமைச்சரின் சந்திப்புக்கு சென்றுவந்த அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லையா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர் தலமையில் நடைபெற்றதாக கூறப்படும் சந்திப்பு ஒன்றுக்கு கொழும்பு சென்றுவந்த அதிகாரிகள் சிலர் தனிமைப்படுத்தப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

கடந்த 5ம் திகதி கொழும்பில் அமைச்சர் வாசுதேவ தலமையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாகவும் குறித்த சந்திப்புக்காக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து 5 அதிகாரிகள் கொழும்பு சென்று திரும்பியுள்ள நிலையில், 

தனிமைப்படுத்தப்படாமல் அவர்கள் வெளியில் நடமாடுவதாக அரச அதிகாரிகள் சிலரே சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக மாகாண சுகாதார பணிப்பாளரை கேட்டபோது குறித்த விடயம் தமக்கு கூறப்படவில்லை. எனவும் அது குறித்து அவதானிப்பதாகவும் கூறினார். 

Radio