பல்கலைகழக வளாகத்தில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்ககூடாது என தீர்மானிப்பது பல்கலைகழக நிர்வாகம்..! யாழ்.பல்கலைகழக சம்பவத்துடன் அரசுக்கு தொடர்பில்லை..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக வளாகத்தில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்ககூடாது என தீர்மானிப்பது பல்கலைகழக நிர்வாகம்..! யாழ்.பல்கலைகழக சம்பவத்துடன் அரசுக்கு தொடர்பில்லை..

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிக்கப்பட்டதும், மீள நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டியதற்கும் பல்கலைகழக நிர்வாகத்தின் தீர்மானமே காரணம். இதில் அரசாங்கம் எந்தவிதத்திலும் தொடர்புபடவில்லை. 

மேற்கண்டவாறு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். இதன்போது நாட்டிலுள்ள பல பல்கலைகழகங்களில் நினைவு துாபிகள் உள்ள நிலையில், 

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள நினைவு துாபியை இடிப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா? என்ற  ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர்.

பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு