SuperTopAds

யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியரின் தாய் தறவான முடிவை எடுத்து உயிரை மாய்ப்பு..! பொதுமக்களிடம் சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியரின் தாயார் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார். 

வெளிமாவட்டம் ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் குறித்த ஆசிரியருக்கு கடந்த 10ம் திகதி கொரோனா தொற்று உறுதியானது. 

இதனையடுத்து இன்றைய தினம் தாயார் வீட்டில் துாக்கில் தொங்கிய உயிரை மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை. என சுட்டிக்காட்டியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

தொற்றுக்குள்ளான பலர் நோய் குணமடைந்த நிலையில் வீடு திரும்பி சுகதேகியாக வாழ்கின்றனர். அதேபோல் பீ.சி.ஆர் பரிசோதனையும்

செவி வழி கதைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுவதைபோல் பாரதுாரமான ஒரு பரிசோதனை அல்ல. மக்கள் இதனை குறித்து அச்சப்படதேவையில்லை. 

எனவே மக்கள் உங்களுடையதும், உங்கள் சமூகத்தினதும் நன்மையை கருதி அச்சமில்லாமல் மனச்சோர்வடையாமல் இருக்கவேண்டும். 

அதனை நினைத்து தவறான முடிவுகளை எடுக்ககூடாது. என தாம் பொதுமக்களிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.