5.56 இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள்!! -தமிழகத்திற்கு இன்று வருகிறது-
தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா வைரசுக்கான தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 10 மையங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றார்.