அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம்!! -ரசிகர்களிடம் உருகும் ரஜினிகாந்த்-.

ஆசிரியர் - Editor II
அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்த வேண்டாம்!! -ரசிகர்களிடம் உருகும் ரஜினிகாந்த்-.

அரசியலுக்கு வருமாறு மேலும், மேலும் என்னை வேதனைக்கு உள்ளாக்கவேண்டாம் என்றும் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்று ரஜினி அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் அறிவிப்பை ஏற்க மறுத்து ரசிகர்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இருப்பினும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு, நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார். 


Radio