வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! வடக்கில் கொட்டித்தீர்க்கும் கனமழை, இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு, மழை தொடரும்..

ஆசிரியர் - Editor I

வடமாகாணம் முழுவதும் இன்றைய தினம் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். 

வளிமண்டலவியல் திணைக்களம் வடகிழக்கு மாகாணங்களுக்கு நேற்றய தினம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் வடமாகாணத்தில் சுமார் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும்.

எனவும் முன்னெச்சரிக்கை வழங்கியிருந்தது. இந்நிலையில் வடக்கில் நேற்று இரவு தொடக்கம் கனமழை பெய்து வருகின்றது. இதேபோல் வவுனியா மற்றும் முல்லைத்தீவில் கனமழை பெய்துவரும் நிலையில்,

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து சடுதியாக அதிகரித்ததை தொடர்ந்து இன்று காலை 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

இதனாலும் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதுடன் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை 4 மணிக்கு வழங்கிய முன்னெச்சரிக்கை படி

36 மணித்தியாலங்களுக்கு கனமழைக்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் நடந்து கொள்வது சிறந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு