33 ஆயிரம் டொன் கொரோனா மருத்துவ கழிவுகள்!! -7 மாதங்களில் இந்தநிலை என்கிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்-
கடந்த 7 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 33 ஆயிரம் டொன் கொரோனா மருத்துவ கழிவுகள் தேங்கியுள்ளது என்று அகில இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு கோடியே 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 999 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் 7 மாதங்களில் இந்தியாவில் 33 ஆயிரம் டொன் கொரோனா மருத்துவ கழிவுகள் தேங்கியுள்ளது. இதில் அக்டோபர் மாதத்தில் தான் அதிகபட்சமாக 5,500 டொன் மருத்துவ கழிவுகள் தேங்கியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 7 மாதங்களில் 5,367 டொன் மருத்துவ கழிவுகள் ஏற்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.