யாழ்.பல்கலைகழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிக்கப்பட்டமைக்கு பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்..! நாளைய ஹர்த்தாலுக்கும் நாம் ஆதரவு..
யாழ்.பல்கலைகழக வாளத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு முற்றம் அழிக்கப்பட்டமைக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக யாழ்.பல்கலைகழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
எமது பல்கலைகழகத்தில் இடம்பெற்ற இறந்தோர் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயம என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்கவேண்டும்.
என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இ ந்த பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பணிப்புரை விடுத்தவர்கள் நிலைமைமைய மேலும் மோசமாக்கியுள்ளனர்.
என யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாளை திங்கட்கிழமை வடக்குகிழக்கு தழுவிய நிலையில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக
யாழ்பல்கலைகழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.