SuperTopAds

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்பிற்கும் துணைவேந்தர் தெரிவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவர் குமாரவடிவேல் குருபரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் தன்னிடம் ஆதாரங்கள் உள்ள நிலையில் அவ்வாறு துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்ட சற்குணரஜா குறித்த நிபந்தனைகளின் ஒன்றான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அகற்றுவதற்கு ஏற்கனவே உடன்பட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழக தூபி உடைப்புக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நேற்றைய தினம் இராணுவ தளபதியும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரும் தெரிவித்த நிலையில் 

இவரது பாதிவு குறித்த உத்தரவை வழங்கியது யார் என்ற சந்தேகத்தை தெளிவு படுத்துவதாக அமைகிறது. இவ்வாறான நிலையில் ஏனைய தூபிகளும் அகற்றப்படுவதற்கு வெகு  நாட்கள் எடுக்காது என அவரது பதிவின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.