தயாராகிறது சூது கவ்வும் 2 ஆம் பாகம்!! -முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்-

ஆசிரியர் - Editor II
தயாராகிறது சூது கவ்வும் 2 ஆம் பாகம்!! -முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்-

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் வெளியான சூது கவ்வும் விஜய்சேதுபதிக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. 

பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதாரவி, ரமேஸ் திலக், கருணாகரன், சஞ்சனா செட்டி ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை தயார் செய்து நடிகர், நடிகைகளை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். சூது கவ்வும் 2 படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்குவதாக கூறப்படுகிறது.


Radio