இந்தியாவில் உருமாறிய கொரோனா!! -பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு-
இந்தியாவில் மிக வேகமாக பரவக்கூய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் நேற்று நிலவரப்படி நாடு முழுவதும் 82 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உருமாறிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.