யாழ்.பல்கலைக்கழக சூழலில் நள்ளிரவு தாண்டியும் நீடிக்கும் பதற்றம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.பலகலைகழக சுற்றாடலில் உருவாகியிருந்த பதற்றமான சூழல் நள்ளிரவு தாண்டியும் நீடிக்கிறது.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும்,  முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.

இதனால் யாழ்.பல்கலைக்கழக வீதியில் பெருமளவு படையினர் விசேட அதிரடிப்படையினர், குவிக்கம்பட்டுளனர்.

இதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்த நிலையில் உள்ளே நுழைந்த பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

மேலும் பல்கலைகழக நிர்வாகத்தை சேர்ந்த பலர் நினைவு தூபி இடிக்கப்படுவதை வழிநடத்திவருவதாக சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படையினர் குவிக்கப்பட்டு வருவதால் மாணவர்களும், பொதுமக்களும் கூடி பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு