யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அரசின் உத்தரவில் இடிக்கப்படுகிறது..! கதிரை ஆசையில் கனவான்கள் மௌன விரதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அரசின் உத்தரவில் இடிக்கப்படுகிறது..! கதிரை ஆசையில் கனவான்கள் மௌன விரதம்..

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அரசாங்கத்தின் உத்தரவையடுத்து இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

2009ம் ஆண்டு இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி  மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் 

முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 

2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு 

நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு