பெண் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு!! -கோயிலுக்குள் வைத்து காமுகர்களின் வெறிச் செயல்-

ஆசிரியர் - Editor II
பெண் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு!! -கோயிலுக்குள் வைத்து காமுகர்களின் வெறிச் செயல்-

நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.