யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் என்ன..? இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விளக்கம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மிக விரைவில் திறக்கப்படும் என அரசாங்கம் தொிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார். 

கூட்டமைப்பினரை இந்திய வௌிவிவகார அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மீளத் திறப்பது 

மற்றும் வட,கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் தமது கரிசனைகளை வௌிப்படுத்தினர்.

குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.இன்போது கருத்து வௌியிட்ட இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 

எதிர்வரும் 23 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமும் செயற்பபாட்டுக்கு வரும் என 

அரச தரப்பில் கூறப்பட்டுள்ளதாக கூட்டிக்காட்டினார்.அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் 

இந்தியாவின் உதவி அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கோரப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு