யாழ்.மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்பட்டால் என்ன செய்வது..! இன்று காலை விசேட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படலாம். அவ்வாறான நிலை உருவானால் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து யாழ்.மாவட்ட கொரோனா செயலணி கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தலமையில் இன்று காலை நடைபெற்ற மேற்படி கட்டத்தில்,

மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த தொழில்நுட்பக்கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ளநிலைமையினைபேண முடியும்.

கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரப் பிரிவினர் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு