விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

விபத்தில் சிக்கி காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதுளை - ஹல்துமுல்ல பிரதேசத்தில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒன்றரை வயதான குறித்த குழந்தை உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சந்தேகத்தினடிப்படையிலான பிரசோதனையில்

குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மிகுதி 13 பேருக்கும் பீ.சி.ஆர் பதிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Radio