SuperTopAds

13 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்புசி!! -முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை-

ஆசிரியர் - Editor II

இந்தியாவில் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிசீல்டு, சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் இந்தியாவில் கொரோனே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நடவடிக்கைகளுக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி முதலில் முன்கள பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் செலுத்தப்பட இருக்கிறது.