பொலிஸாரை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விவசாயிகள்!! -தரையில் உருண்டு, புரண்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
பொலிஸாரை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த விவசாயிகள்!! -தரையில் உருண்டு, புரண்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு-

உயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு இழப்பீடு தொகை பெற்றுத்தரக்கோரி நடத்திய போராட்டத்தின் போது விவசாயிகள் திடீரென பொலிஸாருடைய கட்டுப்பாடுகளை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 50ற்க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. 

அமைக்கப்படும் உயர்மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் இடங்களில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களின் ஒப்புதலின்றி வலுக்கட்டாயமாக அங்குள்ள பயிர்களை சேதம் செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100ற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு தொகை பெற்று தரக்கோரி நேற்று பகல் 12.10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை மூடி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் தங்களை உள்ளே விடுமாறு கோரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் படுத்து உருண்டு கதறி அழுதனர். 

இதன் போது விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.