வெள்ள நிவாரணம் மற்றும் பாடசாலைகள் பெயரை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த ஆசாமியை மடக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..! யாழ்.கரவெட்டியில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி - கரவெட்டி பகுதியில் பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் யாழ்.பல்கலைகழகம், வெள்ள நிவாரணம் ஆகியவற்றை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது.குறித்த நபர் நிவாரணம் என்ற பெயரில் மக்களிடம் போலியாக கூறி நிதி சேகரிப்பில் ஈடுப்ட்ட நிலையில் பொது மக்கள் மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கரவெட்டி மத்தி அத்துளு ஜே-367, ஜே-364, ஜே-366 கிராம அலுவலகர் பிரிவில் நிதி சேரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் இன்று நிதி சேரிப்பில் ஈடுபட்ட சமயம் எங்கிருந்து வருவதாக கேட்டபோது 

நேற்று பல்கலைக் கழகம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிலர் 5000 ரூபா பணமும் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை ஒரு வீட்டிற்கு சென்று நிதி கேட்ட போது சந்தேகம்கொண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக கிராம சேவகர், கரவெட்டி பிரதேச செயலாளர், 

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த போலி ஆசாமி அகப்பட்டார்.குறித்த நபர் கடந்த வாரம் முதல் இவ்வாறான நிதி மோசடியில் ஈடுபடுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு