SuperTopAds

கடமை நேரத்தில் மதுபோதையில் அருவி ஆற்றில் மூழ்கி உயிர் தப்பி 3 கிராம சேவகர்களுக்கு தரமான சம்பவம்..!

ஆசிரியர் - Editor I

மன்னார் - அருவி ஆற்றின் கீழ் வருட இறுதி கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி உயிர் தப்பிய 3 கிராம சேவகர்களுக்கும் 3 திசைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மது போதையில்  ஆற்றில் குளிக்க முற்பட்டபோது சுழிக்குள் இழுக்கப்பட்டு அள்ளுண்டு சென்ற நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார். 

வருட இறுதி கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் உயிலங்குளம் வங்காலை கட்டைக்காடு முசலி போன்ற இடங்களை சார்ந்தவர்கள் என்றும் 

ஆற்றில் குளித்த இடத்தில் சமைத்த உணவுகளும், மதுபானங்களும் பொலிசாரால்  மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தார்கள். 

மீட்கப்பட்ட கிராம சேவையாளர்கள் மூவரும்  மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வீடு திரும்பினர். இதேநேரம் அருவியாற்றில் குளிப்பது 

ஆபத்தானது என்று நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பொது விடுமுறைநாள் என்பது கிராம சேவகர்களின் விடுமுறை நாள் ஆகாது 

என்பதோடு பௌர்னமி தினத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக நடவடிக்கையின் பிரகாரம் மடு, தலைமன்னார், மாந்தை மேற்கு என மூன்று பிரதேச செயலாளர் பிரிவிற்கும் தனித் தனியாக பிரதேச செயலாளர் பிரிவின் இறுதிக் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் ஓவ்வொருவரும் தமது  வீட்டில் இருந்து 50 கிலோ மீற்றருக்கும் அதிக தூரம் தினமும் பயணிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.