SuperTopAds

இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து!! -38 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து!! -38 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி-

இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு ஆபத்தான உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இங்கிலாந்தில் பரவும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்தியாவில் தற்போதுவரை எத்தனை பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. 

இதனடிப்படையில் அங்கு இதுவரை மொத்தம் 38 பேருக்கு உருமாறிய கொரோனா பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளார்.