SuperTopAds

முதல்வருக்கான வாகனம் வேண்டாம், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுப்பணிக்கு கொடுங்கள்..! மாநகர முதல்வர் மணிவண்ணன் அதிரடி..

ஆசிரியர் - Editor I
முதல்வருக்கான வாகனம் வேண்டாம், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுப்பணிக்கு கொடுங்கள்..! மாநகர முதல்வர் மணிவண்ணன் அதிரடி..

யாழ்.மாநகரசபைக்கு முதல்வருக்குரிய வாகனம் எனக்கு வேண்டாம். என்னுடைய மாத சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை சபையின் பொதுப்பணிக்காக செலவிடுமாறும் முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் மாநகர சபையில் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் நேற்று பதவியேற்றார். தனது 37ஆவது வயதில் யாழ்ப்பாணம் மாநகரின் பிதாவாக பதவி ஏற்ற அவர், இளவயதில் பதவி வகித்த பெருமையைப் பெற்றார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையால் இதுவரை காலம் முதல்வருக்கு வழங்கப்பட்டு வந்த வாகனத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன், ஊதியம், எரிபொருளுக்கான கொடுப்பனவைப் 

பெற்று சபையினால் முன்னெடுக்கப்படும் பொதுப் பணிகளுக்கு செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கான திட்டங்களை வகுக்குமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரி அவர் கேட்டுள்ளார்.இ

துதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு தனது நிலைப்பாட்டை அவர் இன்று தெரியப்படுத்தினார்.