கிளிநொச்சி மாவட்டத்தில் அனத்த முன்னாயத்த நடவடிக்கைகளில் இராணுவம்..! நோில் ஆராய்ந்தார் மாவட்ட செயலர்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளில் படையினர் களமிறங்கியுள்ளனர். 

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் இராணு வத்தினரின் உதவியுடன் விளாவோடை பகுதிக்கு செல்லும் பாலம் 

மற்றும் கொங்கிரீட் பாதையில் ஏற்படும் வெள்ள அரிப்பை தடுக்க முயற்சி இடம்பெற்று வருகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 

மழையுடன் கூடிய வானிலை நிலவியதால் வெள்ள நீர்கள் வழிந்து ஓட தொடங்கியுள்ளது இந்நிலையில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளாவோடை பகுதிக்கு செல்லும் பாலம் மற்றும் கொங்கிரீட் பாதை ஆகியன 

வெள்ள நீரினால் அரிக்கப்பட்டு உடையும் நிலையில் உள்ளது.இவ்வாறு அரிப்புக்குள்ளான விளாவோடை வீதி 

மற்றும் பாலம் உள்ள பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற தற்காலிகமான தடுப்பு நடவடிக்கையினை 

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஆகியோர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு