SuperTopAds

பெண்களின் படங்களை ஆபாசமாக எடிட் செய்து பணம் பறித்த நபர் கைது!!

ஆசிரியர் - Editor II
பெண்களின் படங்களை ஆபாசமாக எடிட் செய்து பணம் பறித்த நபர் கைது!!

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, பின்னர் எடிட் செய்து, 100ற்க்கும் அதிகமான பெண்களை மிரட்டி பணப்பறித்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் சுமித் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ள 26 வயதான குறித்த நபர், தொடர்ந்து பல பெண்களிடம் இது போன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களின் பதிவேற்றப்போவதாக மிரட்டி பெரும் தொகை பணத்தினை பறித்து வந்துள்ளார். 

அண்மையில் பெண் வங்கி ஊழியர் ஒருவருடைய புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு, பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். குறித்த வங்கி ஊழியர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

இதனடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 100ற்கும் அதிகமாக பெண்களில் இவ்வாறு ஆபாசமாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பெரும் தொகை பணத்தினை பறித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.