SuperTopAds

சித்ரா வழக்கை சி.பி.சி.ஐடி விசாரிக்க வேண்டும்!! -முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் மனு-

ஆசிரியர் - Editor II
சித்ரா வழக்கை சி.பி.சி.ஐடி விசாரிக்க வேண்டும்!! -முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் மனு-

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐடி விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு ஒன்றினை கையளித்துள்ளார். 

சித்ரா, கடந்த 9 ஆம் திகதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14 ஆம் திகதி கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐடி விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு அளித்துள்ளார்.