யாழ்.மாநகரசபையின் புதிய மேயராக வி.மணிவண்ணன்..!வாக்கெடுப்பில் வெற்றி..
யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில்,
மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் பதிவி இழந்திருந்தார் இதனையடுத்து
மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்நிரஞ்சன் தலமையில் இன்று காலை புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது 21 வாக்குகள் மணிவண்ணனுக்கு ஆதரவாகவும், 20 வாக்குகள் ஆனோட்டுக்கு ஆதரவாகவும்
வழங்கப்பட்ட நிலையில் மணிவண்ணன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.