அருவி ஆற்றில் குளிக்க சென்றிருந்த 5 கிராம சேவகர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்..! 4 பேர் மீட்பு, ஒருவரை காணவில்லை..
மன்னார் - நானாட்டான் அருவி ஆற்றுபகுதியில் குளிக்க சென்றிருந்த 5 கிராமசேவகர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் 4 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. விடுமுறை நாளான இன்று 5 கிராம சேவகர்கள் இணைந்து அருவி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். பருவமழை காரணமாக ஆற்றில் அதிகளவான வெள்ளம் ஓடிய நிலையில்,
5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து 4 பேர் ஒருவாறாக தப்பி கரையில் ஏறியபோதும் ஒரு கிராமசேவகர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போயிருக்கின்றார்.
காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் களமிறங்கியிருக்கின்றனர்.