யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவரை நியமிப்பத்தில் இழுத்தடிக்கும் மாகாண சுகாதார அமைச்சு..! மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமனம் செய்வதற்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களம் இழுத்தடித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் ஒருவரை நியமனம் செய்யுமாறு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனாலும் கூட அதுசம்மந்தமாக எந்தொரு நடவடிக்கையும் எடுக்காமல் தனிப்பட்ட பிரச்சனையினை கொண்டு பழிவாங்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த எட்டு மாதகாலமாக இங்கு கடமையாற்றிய 

நிரந்தர வைத்திய அத்தியட்சகராகிய வைத்தியர் த.குகதாசன் மீது கொவிட் -19 பரவல் தொடர்பில் வைத்தியசாலையைத் தயார்ப்படுத்தி நோயாளர்களிற்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 

என குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். என்ற அடிப்படையில் வைத்தியஅத்தியட்சகரை தற்காலிக இணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைத்தனர்.

இணைப்புச் செய்தபின்னர் விசாரணைக் குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டனர். இக்காலப்பகுதியில் வைத்தியசாலையின் நிர்வாகப் பொறுப்பினை வகிக்கக் கூடிய தகுதியுள்ள பதில் நிர்வாக அத்தியட்சகராகச் செயற்படும் 

வைத்தியர் உட்பட ஏனைய சிரேஸ்ட வைத்தியர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் எவ்விதமான நிர்வாகத் தகுதிகளோ, பட்டப்பின் கல்வி தகைமைகள் அற்ற வைத்தியர் கமலநாதன் வைத்திய அத்தியட்சகரிற்கான 

பதில் கடமைகளை ஆற்றுவதற்கு முறையற்ற விதத்தில் மத்திய சுகாதார அமைச்சிடம் விதப்புரைகள் வழங்கி வைத்தியர் கமலநாதனிடம் பொறுப்புக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

மேற்கொண்டு நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் முற்று முழுதாக ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என விசாரணைக் குழுவினரால் முன்வைக்கப்பட்டு 

முற்று முழுதாக குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குற்றச்சாட்டுக்கள் அற்ற நிலையில் குறித்த வைத்தியஅத்தியட்சகர் வைத்தியர் த.குகதாசனை மீளவும் வைத்திய அத்தியட்சகராக 

மீளிணைப்பு செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சினால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இரு மாதங்களுக்கு முன்னரே கடிதமிடப்பட்ட நிலையிலும் இதுவரை மீளிணைப்புச் செய்யப்படவில்லை.

ஏந்த ஒரு இடத்திலாவது இவரை இவ் வைத்தியசாலைக்கு நியமிக்க வேண்டாம் என விசாரனைக்குழு பரிந்துரைக்க வில்லை. அதில் பிரச்சினை ஏற்படலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது தவிர நியமிக்க கூடாது என தெரிவிக்கப்படவில்லை.

என குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு